2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கொவிட்-19; இந்தியாவில் 55 பேர் பலி

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகம்

இந்தியாவில்    கோவிட்-19  தொற்றியுள்ளோர் எண்ணிக்கை  மார்ச் 31 நிலவரப்படி 1,590 ஐக் கடந்தது என்றும் பலி எண்ணிக்கை 55 என்றும் சுகாதார அமைச் சகம் மற்றும் மாநில அரசுகளின் தரவுகள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுதும் கோவிட்-19 தொற்றுக்குப் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 8 இலட்சத்தையும் கடந்தது. பலி எண்ணிக்கை 42,000ஐ கடந்து கோவிட்-19 கோரத் தாண்டவத்தை நடத்தி வருகிறது.

டெல்லி அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கோவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தூரில் 19 புதிய கோவிட்-19 தொற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை  ம.பி.யில் 63 ஆக அதிகரித்து ள்ளது.

இராஜஸ்தானில் இன்று காலை 9 மணி வரை புதிய கோவிட்-19 தொற்று எதுவும் இல்லை. இம்மாநிலத்தில் மொத்தமாக 93 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி மசூதியில் வழிபாட்டுக்காக கூடியதாகக் கூறப்படுபவர்களில் கோவிட்-19  தொற்றுக்கு இலக்கான வர்களால் பாதிப்பு 128 என்று அரசு தரப்பு செய்திகள் தெரிவிகின்றன.

தப்லிக் மசூதி விவகாரத்தில் 2,137 பேரை அடையாளம் கண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் பல்வேறு மாநிலங்களில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X