2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காவிரிநீர் பங்கீடு உரிமையை விட்டுக் கொடுத்தவர் பழனிசாமி

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 23 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேட்டூர்;

‘காவிரி நதிநீர் பங்கீடு உரிமையை மீட்டெடுத்த பொன்னியின் செல்வன், காவிரி காத்தான் என போஸ்டர் ஒட்டிக் கொள்ளும் முதல்வர் பழனிசாமி, 14.75 டிஎம்சி நீரை குறைவாகவே பெற்று, தமிழக மக்களின் உரிமையை விட்டுக் கொடுத்துள்ளார்,’ என திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓலப்பட்டி ஊராட்சி 5வது மைல் பகுதியில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி வரவேற்றார். திமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகளை பெற்று, ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதி அளித்தார்.

இதற்கான பெட்டியில் மக்களிடம் பெற்ற கோரிக்கை மனுக்களைப் போட்டு, பூட்டி, சீல் வைத்து சாவியை திமுக தலைவர் ஸ்டாலின் வைத்துக் கொண்டார்.

 

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மேட்டூர் அணை 1934ஆம் ஆண்டு முதல் தமிழக மக்களுக்கு பயனளித்து வருகிறது.

அதேபோல, திமுக ஆட்சி காலத்தில் சோழையாறு அணை, பொன்னியாறு அணை, பெரியார் அணை, எருக்கன்பட்டி அணை நீர்த்தேக்கம் என பல அணைகளைக் கட்டி, தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை செழிக்க வைத்தது, நவீன கரிகால சோழனாக இருந்தவர் மறைந்த முதல்வர் கருணாநிதி.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .