2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

குஜராத் முதல்வருக்கு கொரோனா தொற்றில்லை

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 22 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆமதாபாத்,

குஜராத் முதலமைச்சர்  விஜய் ரூபானிக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில், அவருக்கு தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது.

வதோதரா உள்ளிட்ட 6 மாநகராட்சிகளுக்கு எதிர்வரும் 21ஆம் திகதி  தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி கடந்த 14ஆம் திகதி  வதோதராவில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவர் மேடையில் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 15ஆம் திகதி , அவருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று உறுதியானது. அதைத் தொடர்ந்து அவர் ஆமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு நேற்று வெளியானது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. எனவே அவர் கொரோனாவின் பிடியில் இருந்து குணம் அடைந்திருப்பது உறுதியாகி உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .