2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தல்: நாளை வாக்குகள் எண்ணப்படும்

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 22 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஹமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி 6 மாநகராட்சிகளில் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இதன்படி அஹமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் மற்றும் பாவ் நகர் மாநகராட்சிகளில் நேற்று வாக்குபதிவு நடைபெற்றது. கடந்த பல ஆண்டுகளாக இந்த மாநகராட்சிகள் பாஜவிடம் இருந்து வருகிறது.

6 மாநகராட்சிகளிலும் மொத்தம் 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இது தவிர ஜூனாகத் மாநகராட்சி யில் நடக்கும் 2 இடங்களுக்காக நடக்கும் இடைத்தேர்தலில் 9 பேர் போட்டியிட்டனர். 

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஹமதாபாத், மாநகராட்சிக்கு உட்பட்ட நரன்புரா பகுதிவாக்குப்பதிவு மையத்தில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். மாநில முதல்வர் விஜய்ருபானி தனது மனைவியுடன் ராஜ்கோட் வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தார். வாக்குகள் எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.

முன்னதாக குஜராத் மாநில தேர்தல் ஆணையத்தின் (எஸ்.இ.சி) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, ஆறு நகராட்சி நிறுவனங்களும் சராசரியாக 43% வாக்குக ளைப் பெற்றுள்ளன. எந்தவொரு பெரிய அசம்பா வித மும் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியாக முடிந்து விட்டது என்று மாநில தேர்தல் ஆணையர் சஞ்சய் பிரசாத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .