2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

குதிரைகளுக்கு நன்றி செலுத்தும்; ’குதிரை பொங்கல் விழா’

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 17 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

திண்டுக்கல்

சிறுமலையில் விவசாயிகளுக்கு உதவும் குதிரைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக குதிரைப்பொங்கல் கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மலைப்பகுதி யி லுள்ள  கிராமங்களில் கொண்டாடப்பட்டது. விளைநிலங்களில் வாழை, எலுமிச்சை, சவ்சவ், அவரை, காப்பி, ஏலக்காய் ஆகிய மலைப் பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன.

மேடுபள்ளங்கள் நிறைந்த ஒற்றையடிப் பாதையில் விவசாயத்துக்குத் தேவையான இடுபொருட்களை விளைநிலங்களுக்கு கொண்டு செல்லவும், அறுவடை செய்யப்பட்ட பயிர்களை கொண்டு வரவும்,மலைப்பாதைகளில் குதிரையை பயன்படுத்துகின்றனர்.

இதனால் தாங்கள் விவசாயம் செய்ய உதவி புரியும் குதிரைக்கு நன்றி செலுத்தும் விதமாக குதிரைப்பொங்கல் விழா சிறுமலை மலைகிராமத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு குதிரைகளை குளிக்க வைத்து, திலகம் இட்டு அவற்றுக்கு முன் பொங்கல் வைத்து மலைக் கிராம மக்கள் வழிபட்டனர். பின்னர் குதிரைகளுக்கு பொங்கலை ஊட்டிவிட்டு தங்கள் நன்றிக்கடனை செலுத்தினர். குதிரைகளை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .