2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கொவிட் -19 இருந்து பாதுகாக்க மஞ்சள், வேப்பிலை

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19  இருந்து தற்காத்துக்கொள்ள மஞ்சளும், வேப்பிலையும் உதவும் என்ற தகவல் தமிழ்நாடு முழுக்கப் பரவியதன் விளைவு, வேப்பமரங்களை 

மொட்டையடித்து, கடைகளில் மஞ்சள் பொடிக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள் மக்கள்.

முதலில் வீட்டு வாசலில் மஞ்சள் தெளித்து, தலைவாசல் நிலையில் வேப்பிலை

மட்டுமே கட்டிய மக்கள், மஞ்சள் கலந்த வாளித் தண்ணீரை வாசலில் வைத்து கை, கால் அலம்பப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். பலசரக்குக் கடை மற்றும்

காய்கறிக் கடை நடத்தும் பெண்களில் பலர் உள்ளங்கையில் இருந்து முழங்கை வரையில் தினமும் மஞ்சள் பூசிக் கொண்டிருக்கிறார்கள். பல கிராமங்களின்

நுழைவாயிலில், வேப்பிலை தோரணமாகத் தொங்குகிறது. இவை மருத்துவமா, மூடநம்பிக்கையா என்ற விவாதம் ஒருபுறம் நடக்கிறது.

தமிழர் வாழ்வியலில் மஞ்சளுக்கும், வேப்பிலைக்கும் என்ன பங்கு இருக்கிறது?

என்று தமிழர்களின் பண்பாட்டையும், வாழ்க்கை முறையையும் விரிவாகக் கள ஆய்வு செய்திருக்கும் பேராசிரியர்கள் தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணின் ஆகியோருடன் பேசினோம்.

"தமிழர் வாழ்வில் மஞ்சள் ஆரோக்கியம் தொடர்பான ஒரு பொருளாகவே இருந்திருக்கிறது.

வெப்ப மண்டல உயிர்கள், நீராடுவதில் பெரும் விருப்பம் உடையன. குளிர்த்தல் என்ற வார்த்தையையே நாம் இப்போது குளித்தல் என்று சொல்கிறோம்.

அவ்வாறு குளிக்கும்போது தமிழர்கள் சவுக்காரமாக (சோப்) எதைப் பயன்படுத்தினார்கள் என்று பார்த்தால், இலக்கியங்களில் பல சான்றுகள் கிடைக்கின்றன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .