2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொவிட்-19 பலியானவர்களின் உடல்கள் தகனம்

Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை, 

கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், கொவிட்-19 ஆல் உயிரிழந்தவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் உடல்களை அருகில் உள்ள மயானத்தில் தகனம் மட்டுமே செய்ய வேண்டும்.

உடலை அடக்கம் செய்ய அனுமதி கிடையாது. மதசடங்குகள் செய்யும் போது

உயிரிழந்தவர்களின் உடலை தொடுவது தவிர்க்கப்பட வேண்டும். மும்பை மாநகராட்சி  ஆணையாளர் பிரவீன் பர்தேசி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:-

மேலும் கொவிட்-19 ஆல் உயிரிழந்தவரின் இறுதி சடங்கில் 5 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கொவிட்-19 ஆல் உயிரிழப்பு குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்த பின்னர் தான் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

மயான பணியாளர்கள் முறையான பாதுகாப்பு முறைகளை பின்பற்றி தான் உடலை தகனம் செய்ய வேண்டும்.

எனினும் கொவிட்-19  உயிரிழந்தவர்களின் உடலை ஒருவர் அடக்கம் செய்ய விரும்பினால், மும்பைக்கு வெளியே உடலை கொண்டு சென்று அடக்கம் செய்யலாம்.

உடலை அனைத்து பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றிச் சொந்த ஏற்பாட்டில் அவர்கள் எடுத்து செல்லலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .