2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ஜோகி மரணம்

A.K.M. Ramzy   / 2020 மே 30 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராய்ப்பூர்

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் முதல்வரும், ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியின் தலைவருமான அஜித் ஜோகி நேற்றுக் காலமானார் (வயது 74).

மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் ராய்ப்பூரில் அனுமதிக்கப் பட்டிருந்த அவருக்கு 3 வாரங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவரின் உடல்நிலை மேலும் மோசமடைந்து கோமா நிலைக்கு சென்ற நிலையில் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார்.

நேற்றுப் பிற்பகல் அவரது உடல்நிலை மிகவும் மோசடைந்து உயிரிழந்தார்.

அவர் மரணமடைந்த செய்தியை அவரது மகன் அமித் ஜோகி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரியான அஜித் ஜோகி 1946இல் பிலாஸ்பூரில் பிறந்தவர். போபாலில் உள்ள ஐஐடியில் படித்த ஜோகி, ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இ்ந்தூரில் 1981 முதல் 1985 வரை

மாவட்ட ஆட்சியராகஇருந்தார். அதன்பின் காங்கிரஸ் கட்சியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அதில் சேர்ந்தார்

காங்கிரஸ் கட்சி சார்பில் இரு முறை தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யான அஜித் ஜோகி வெற்றி அனைவரும் அறியும்படி செயல்பட்டார்.

சத்தீஸ்கர் மாநிலம் பிரிக்கப்பட்டபி்ன் 2000முதல் 2003-ம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வராக ஜோகி இருந்தார்.

அதன்பின் காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன்ஏற்பட்ட மனக்கசப்பால் 2016ஆம்ஆண்டு பிரிந்து சென்று ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியை

உருவாக்கினார். சமீபத்தில் நடந்த தேர்தலில் மார்வாஹி தொகுதியில் போட்டியிட்டு வென்று ஜோகி எம்எல்ஏவாக உள்ளார்.

சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருடன் நீண்டகாலம் நட்பு பாராட்டி வந்தபோதும் அஜித் ஜோகிக்கும், ராகுல் காந்திக்கும் இணக்கமான உறவு இல்லை.

இதையடுத்தே அவர் காங்கிரஸில் இருந்து வெளியேறி தனிக்கட்சியை தொடங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .