2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘சென்னையிலிருந்து அமோனியம் நைட்ரேட் அகற்றப்படும்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் துறைமுகத்திலுள்ள எஞ்சியுள்ள அமோனியம் நைட்ரேட், 15 கொள்கலன்களில் ஓரிரு நாளில் சென்னையிலிருந்து பாதுகாப்பாக அகற்றப்படும் என்று வெடிப்பொருள் துறையின் துணை முதன்மை கட்டுப்பாட்டாளர் சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.

சுந்தரேசன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “சென்னை மணலி கொள்கலனின் இருந்து மேலும் 240 தொன் அமோனியம் நைட்ரேட் அகற்றப்பட்டுள்ளது. 240 தொன் அமோனியம் நைட்ரேட்டுடன் ஹைதராபாத்துக்கு 12 கொள்கலன்கள் புறப்பட்டன.

ஏற்கெனவே இம்மாதம் ஒன்பதாம் திகதி கொள்கலன்களில் 181.7 தொன் அமோனியம் நைட்ரேட் கொண்டு செல்லப்பட்டது. 740 தொன் அமோனியம் நைட்ரேட்டில் எஞ்சியவற்றை மூன்றாவது, இறுதிக் கட்டமாக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள அமோனியம் நைட்ரேட் 15 கொள்கலன்களில் ஓரிரு நாளில் சென்னையிலிருந்து பாதுகாப்பாக அகற்றப்படும்” என்று கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .