2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சீனாவிலிருந்து வந்த 248 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருந்து ஏயார் இந்தியா விமானம்மூலம் அழைத்து வரப்பட்ட 500இக்கும் மேற்பட்ட இந்தியர்களில் 248 பேருக்கு கொரோனா வைரஸ்(covid-19) பாதிப்பு இல்லை என்று மருத்துவக் கண்காணிப்பில் உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சீனாவை உலுக்கி எடுத்துவரும் கொரோனா வைரஸால் (covid-19)   இதுவரை 1800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் ஹூபே மாகாணம், வூஹான் நகரைச் சேர்ந்த வர்கள்தான் எனத் தெரியவந்துள்ளது.

இந்த கொரோனா வைரஸ்(covid-19)  25க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பரவி, அங்கு மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், சீனாவில் ஹூபே மாநிலத்தில் சிக்கி இருந்த இந்தியர்கள் 500இக்கும் மேற்பட்டோர் கடந்த மாதத்தில் ஏயார் இந்தியா விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை நடத்தப்பட்டதில் கொரோனா வைரஸ்(covid-19) வைரஸ் தொற்று இல்லாவிட்டாலும், 14 நாள்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .