2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’’சுபாஷ் சந்திரபோசுக்கு இந்தியா நன்றியுடன் இருக்கும்’’

Editorial   / 2020 ஜனவரி 23 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி:

சுதந்திரப் போராட்ட வீரர் ‘நேதாஜி’ சுபாஷ் சந்திரபோசின் 123வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். 

‘ஜனவரி 23, 1897 அன்று, சுபாசின் தந்தை ஜனகிநாத் போஸ் தனது நாட்குறிப்பில், 'மதியவேளையில் ஒரு மகன் பிறந்தான்' என்று எழுதினார். அந்த மகன் (சுபாஷ் 

சந்திரபோஸ்) ஒரு வீரம் மிக்க சுதந்திரப் போராளியாகவும், சிந்தனையாளராகவும் ஆனார், அவர் தனது வாழ்க்கையை ஒரு பெரிய இலட்சியத்துக்காக அர்ப்பணித்தார், அதுதான் இந்தியாவின் சுதந்திரம். மேலும் சக இந்தியர்களின்

முன்னேற்றத்துக்காகவும் நல்வாழ்வுக்காகவும் அவர் போராடினார்’, என நேதாஜியைப் பற்றி மோடி கூறினார்.

காலனித்துவத்தை எதிர்ப்பதில் சுபாஷ் சந்திரபோஸின் துணிச்சலுக்கும், நிலையான பங்களிப்புக்கும்

இந்தியா எப்போதும் அவருக்கு நன்றியுடன் இருக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .