2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான சிபிசிஐடியின் முதல் தகவல் அறிக்கை

A.K.M. Ramzy   / 2020 ஜூலை 01 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

  தூத்துக்குடி,

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் வந்த விவகாரத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் காயங்களுடன் கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக் கப்பட்டதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

பொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதில் இருவரும் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த இருவர் மரணத்தை எதிர்க்கட்சிகள் 

கடுமையாகக் கண்டித்தன. இந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக்  கிளை உத்தரவின் படி, சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சாத்தான்குளத்துக்கு இன்று  மேலும் 2 சிபிசிஐடி குழு வருகை தந்தது.

ஜெயராஜ் கடை அமைந்துள்ள பகுதியில் சிபிசிஐடி விசாரணை நடத்தியது. மேலும் ஜெயராஜ் வீட்டிக்குச் சென்ற சிபிசிஐடி பொலிஸார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். 

  ஜெயராஜ்  மனைவி மற்றும் மகளிடம்  சிபிசிஐடி விசாரணை நடத்தியது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சிபிசிஐடியின் ஒரு குழு விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே,  சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான சிபிசிஐடி-யின் முதல் தகவல் அறிக்கை கோவில்பட்டி நீதிமன்றத்தில்   தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .