2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சிபிஎம்வுக்கு கொள்கை இல்லை

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொல்கத்தா

முழு அடைப்பு போராட்டம் என்ற பெயரில் இடதுசாரிக் கட்சிகள் வன்முறையில் ஈடுபடுவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

12 அம்சப் பொதுக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 10 மத்திய தொழிற்சங்கங்கள்  இன்று நாடுதழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

தொழிலாளர் துறை சீர்திருத்தங்கள், அன்னிய ,நேரடி முதலீடு, தனியார் மயமாக்கல் உள்ளிட்ட மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றது.

அதுபோலவே அரச நிறுவனங்களில் பங்குகளை விற்பனை செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளையும் தொழிற்சங்கங்கள் முன் வைத்துள்ளன.

குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் முழுஅடைப்பு போராட்டத்தின்போது சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் ரயில்வே தண்டவாளத்தில் இருந்து வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொள்கை இல்லை. அரசியல் போராட்டத்தின் பெயரில் ரயிவே தண்டவாளத்தில் வெடிகுண்டை வைக்கின்றனர்.

ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்துகின்றனர்.

இது ஜனநாயக முறையிலான போராட்டம் அல்ல. தாதாயிசம். இதுபோன்ற செயல்களை ஏற்க முடியாது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

இதற்கு முன்பாகவும் அவர்கள் அழைப்பு விடுத்த முழுஅடைப்பு போராட்டத்தை நான் ஏற்கவில்லை. விளம்பரத்துக்காக போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கின்றனர்.

பஸ்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

இதுபோன்ற செயலை விட மோசமானது வேறு ஒன்றும் இல்லை’’ எனக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X