2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

“தனது தோல்விகளை மன்மோகன் சிங் பட்டியலிட வேண்டும்’’

Administrator   / 2019 ஒக்டோபர் 18 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முதலில் தனது தோல்வியை பட்டியலிட வேண்டும் என்று, அந்நாட்டின் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘பிஎம்சி வங்கியில் நிகழ்ந்துள்ள மோசடி மிகவும் துரதிஷ்டவசமானது. என்ன நடந்து இருந்தாலும், அந்த வங்கியின் 16 இலட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மகாராஷ்டிர முதல்வர், பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுபோலவே ரிசர்வ் வங்கி, மத்திய அரசு, மகாராஷ்டிர அரசு ஆகியவை இணைந்து பிஎம்சி வங்கி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். மகாராஷ்டிர மாநிலம், இதுவரை சந்திக்காத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.

விவசாயிகள் தற்கொலை, வேலையில்லா திண்டாட்டம் போன்றவை பெரிய அளவில் மகாராஷ்டிர மாநிலத்தை உலுக்கி எடுக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் உற்பத்தி விகிதம் தொடர்ந்து 4-வது ஆண்டாக வீழ்ச்சியடைந்து வருகிறது’’ எனக் கூறினார்.

இதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

“மன்மோகன் சிங் தனது தோல்வியை முதலில் பட்டியலிட வேண்டும். எங்கே நாம் தவறாக சென்றோம். எதனால் அவரால் மிகச்சிறந்த பொருளாதார வளர்ச்சியை உருவாக்க முடியவில்லை. ஏன் ஒரு நேர்மையான அரசை வழிநடத்த முடியவில்லை.  எதனால் யாருக்கும் எதுவும் செய்ய முடியாமல் போனது. 10ஆம் எண் ஜன்பத் சாலையில் (சோனியா காந்தியின் வீடு) இருந்து வரும் உத்தரவை ஏற்பதைத் தவிர, தானாக பிரதமர் என்ற அடிப்படையில் சொந்தமாக எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் போனது ஏன் என்பதையும் அவர் தெரிவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். (தி இந்து)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X