2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தனிமைப்படுத்தப்பட்டவர்களை வெளியேறாமல் பொலிஸ் பாதுகாப்பு

Editorial   / 2020 மார்ச் 26 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருச்சி

கொவிட்-19  பரவாமல் தடுக்கும் வகையில் தனிமைப்படுத் தப்பட்ட நபர்கள் தங்கியுள்ள 283 வீடுகளில் 24 மணி நேரமும் பொலிஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்  போன்றோர்  கண்டறியப்பட்டு மருத்துவ மனைகளிலும், அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

வீடுகளில் தங்கியுள்ள நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் உட்பட யாரிடமும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது எனச் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இதுபோன்ற வர்களின் வீடுகளைப் பொதுமக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட வீடுகளில் எச்சரிக்கை ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

இதன்படி, திருச்சி மாவட்டத்தில் 483 பேரின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி சுகாதாரத் துறை மற்றும் வருவாய்த் துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், இவர்களில் திருச்சி மாநகர பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட 283 வீடுகளில் வசிக்கும் சிலர், தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற முயற்சிப்பதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, அனைத்து வீடுகளிலும் நேற்று முதல் பொலிஸ்  நிறுத்தப்பட்டு, யாரும் வெளியேறாத வகையில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் வி.வரதராஜூவிடம் கேட்டபோது, “திருச்சி மாநகரம் மக்கள்தொகை அடர்த்தியாக உள்ள பகுதியாகும். இங்கு யாருக்காவது கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டால், பிறருக்கு வேகமாகப் பரவ வாய்ப்புள்ளது.

எனவே, முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறாத வகையில் பொலிஸார், ஊர்க்காவல் படையினரைப் பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ளோம்.

இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் இந்த வீடுகளைக் கண்காணிப்பார்கள் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .