2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மீண்டும் கட்டுப்பாடு

A.K.M. Ramzy   / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை :

தமிழகத்தில் கொரோனா பரவலைத்  தடுக்க மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே மும்பை, டில்லி உள்ளிட்ட பல நகரங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதிநாட்களில் ஊரடங்கு, தியேட்டர்கள் மூடல் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சட்டபை தேர்தல் நடந்து வந்ததால் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது தேர்தல் முடிந்துவிட்டதால் மீண்டும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது நாள் ஒன்றுக்கு 3000க்கும் அதிகமான பேர் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கி உள்ளது.

அதன்படி, திருவிழா, மதக் கூட்டங்களுக்கு தடை. தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே செயல்பட அனுமதி. ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி. திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர், இறுதி ஊர்வலத்திற்கு 50 பேர் மட்டுமே அனுமதி உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X