2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

திருமணத்துக்காக மதம் மாற்றினால் 10 வருட சிறை

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 25 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்னோ : திருமணத்துக்காக மதம் மாற்றம் செய்தால், 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் அவசர சட்டத்துக்கு, உத்தர பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மாநில அமைச்சரவை கூட்டம், நேற்று நடந்தது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மாநில அமைச்சர் சித்தார்த் நாத் சிங் கூறியதாவது:திருமணம் செய்வதற்காக, மதம் மாற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சில இடங்களில் காதலித்து, கட்டாயப்படுத்தி, மதமாற்றம் செய்யப்படுகிறது.

இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், திருமணத்துக்காக மதமாற்றம் செய்வதை குற்றமாக்கும் வகையில், அவசர சட்டம் அமுல்படுத்த, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

 அதே நேரத்தில், திருமணத்துக்குப் பிறகு மதம் மாறுவதற்கு அனுமதி அளிக்கப்படும்.  

'ஹிந்து பெண்களை காதலித்து, கட்டாயப்படுத்தி மாதம் மாற்றி, திருமணம் செய்யும், 'லவ் ஜிகாத்' சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 'இதற்கு தடை விதிக்கும் வகையில் அவசர சட்டம் அமுல்படுத்தப்படும்' என, பா.ஜ., ஆளும், உத்தர பிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேச அரசுகள் கூறி வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .