2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’’நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை’’

Editorial   / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடில்லி

வெங்காயம் விலை உயர்வு தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின் போது, எதிர்க்கட்சி எம்.பிக்களின் குற்றச்சாட்டுக்களுக்கு குறுக்கிட்டு பதிலளித்த

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நான் அதிகம் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்றார். நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது.

ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.130 முதல் ரூ.180 வரை உள்ளது.

வட மாநிலங்களில் வெங்காயத்தின் இருப்பு குறைந்துள்ளதால், மற்றப் பகுதிகளுக்கு அனுப்பப்படும் வெங்காயத்தின் அளவு குறைந்தது. இதனால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதனைக் கண்டித்து டில்லி உள்ளிட்ட பல பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றத்தில் வெங்காயம் விலை உயர்வு தொடர்பான விவாதம்   நடந்தது.

வெங்காய விலை உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் எனவும், பொருளாதார மந்த நிலை காரணம் எனவும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சிலர் குற்றம்சாட்டி பேசினர்.

அப்போது ஒருவர், வெங்காயத்தின் இந்த அதிரடி விலை ஏற்றம் அதிகம் வெங்காயம் சாப்பிடுபவர்களை எரிச்சலடைய வைக்கும் என்றார்.

அதற்கு குறுக்கிட்டு பேசிய நிர்மலா சீதாராமன், " நான் அதிக அளவில் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை.

அதனால் உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். நான் அதிகம் வெங்காயம் பயன்படுத்தாத குடும்பத்தில் இருந்து வந்தவள் " என்றார்.

இது லோக்சபாவில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .