2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் செளகான் வென்றார்

Editorial   / 2020 மார்ச் 24 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அம்மாநில முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் செளகான் வெற்றி பெற்றார்.

மத்திய பிரதேசத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 22 சட்டசபை உறுப்பினர்கள் இராஜினாமா செய்ததால் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள முடியாத நிலையில், முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் தனது பதவியை இராஜினாமா செய்தார். இதனையடுத்து பாரதிய ஜனதாக் கட்சி (பா.ஜ.க) ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியது.

பா.ஜ.கவின் சட்டசபைக் குழுக் கூட்டத்தில், சட்டசபை கட்சித் தலைவராக ஷிவ்ராஜ் சிங் செளகான் தெரிவுசெய்யப்பட்டார். இதனையடுத்து அவர் நேற்றிரவு முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் பதவிப்பிரமாணம் மற்றும் இரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.  

இதன்மூலம் நான்காவது முறையாக மத்திய பிரதேச முதலமைச்சராக அவர் பொறுப்பேற்றார்.  இந்நிலையில், மத்திய பிரதேச சட்டசபை இன்று கூடியது.  இக்கூட்டத்தில் ஷிவ்வராஜ் சிங் செளகான் தனது அரசாங்கத்துக்கான பெரும்பான்மையை நிரூபித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள் புறக்கணித்தார்.  சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி கட்சி சட்டசபை உறுப்பினர்கள் ஷிவ்ராஜ் சிங் செளகானுக்கு ஆதரவளித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .