2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நிர்பயா வழக்கு; முகேஷின் கருணை மனு தள்ளுபடி

Editorial   / 2020 ஜனவரி 29 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

நிர்பயா என்ற மருத்துவ மாணவி, டெல்லியில் ஒரு கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்ட  வழக்கில் குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகியோருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, உச்சநீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்பட்டு விட்டது.

தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் கடைசி சட்ட ஆயுதமாக கருதப்படுகிற சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை கடந்த 17ஆம் திகதி  ஜனாதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து 4 பேரையும் தூக்கில் போட டெல்லி செசன்ஸ் நீதிபதி சதீஷ்குமார் மரண வாரண்டு பிறப்பித்தார். 

4 பேரையும் முதலாம் திகதி காலை 6 மணிக்கு தூக்கில் போட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து மேல் நீதிமன்றில் முகேஷ் குமார் சிங் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, அவசர வழக்காக மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்றுமுன்தினம்

விசாரிக்கப்பட்டது. அப்போது இரு தரப்பு வாதம் முடிந்தது.

அதைத்தொடர்ந்து நீதிபதிகள், முகேஷ் குமார் சிங் வழக்கு மீதான தீர்ப்பு  இன்று வழங்கப்படும் என அறிவித்தனர்.

இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த நிர்பயா குற்றவாளியின் மனுவைமேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .