2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நிஜாமுதீன் கூட்டத்தில் பங்குகொண்டவர்களை அடையாளம் காணும் பணி

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

கொவிட்-19 காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், டெல்லி  நிஜாமுதீன் பகுதியில் கூட்டமொன்று நடைபெற்றது.

இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் மலேசியா, இங்கிலாந்து, சவூதி அரேபியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் சுமார் 1,700 பேர் கலந்து கொண்டனர்.

இதில் பங்குகொண்டவர்களில் கணிசமான பேர் பின்னர் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் சென்றனர். அவர்களில் 9 பேர் கொவிட்-19   தாக்குதல்

காரணமாக மரணம் அடைந்ததாகவும், மேலும் டெல்லியைச் சேர்ந்த 24 பேர் அந்த நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையின் மூலம் தெரியவந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கூட்டம் நடந்த பகுதியில் தங்கி இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். 335 பேருக்கு சளி, இருமல் இருந்ததால் அவர்கள் டெல்லியில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

 டெல்லி நிஜாமுதீன் நிகழ்ச்சியில் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து தெலுங்கானா, கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள்.

இது குறித்து தமிழகத்தின் சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் கூறியதாவ்து:-

டெல்லியில் நடந்த மாநாட்டில் மொத்தம் 1,500 பேர் கலந்து கொண்டனர். இதில் 1,131 பேர் தமிழகத்துக்கு திரும்பியிருந்தனர்.

அவர்களில் 515 பேரை சுகாதார அதிகாரிகள் கண்டுபிடித்து தனிமைப்படுத்தி உள்ளனர்.

கொவிட்-19  பரவுவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் நிஜாமுதீனுக்குச் சென்ற அனைவரையும் கண்டுபிடிப்பது  துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கபட்டவர்கள் இந்த பயணிகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையவர்களாக இருந்தனர் என கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .