2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’நீட் தேர்வை ஏன் திரும்ப பெறக்கூடாது’: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Editorial   / 2019 நவம்பர் 04 , பி.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

முந்தைய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி-திராவிட முன்னேறக் கழக கூட்டணி அரசாங்கம் கொண்டு வந்த நீட் தேர்வை ஏன் இந்த அரசாங்கம் திரும்ப பெறக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் நீட் தேர்வு தொடர்பான பல்வேறு கேள்விகளை முன்வைத்து அதற்கு விளக்கம் கேட்டுள்ளனர்.

“நீட் தேர்வு கொணடு வந்தபிறகு பயிற்சி மய்யங்கள் மூலம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுமார் ஐந்து லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தி பயிற்சி மய்யங்களில் படித்த மாணவர்களே அதிக மருத்துவ இடங்களை பெற்றுள்ளனர் என்பதை அறிவதில் வேதனையாக உள்ளது. 

இது பணம் செலுத்தி படிக்க முடியாத ஏழை மாணவர்களை வேறுபடுத்தும் செயலாகும். பயிற்சி மய்யங்களால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளின் கதவுகள் திறப்பதில்லை.

பிற மாநிலங்களில் நீட் ஆள்மாறாட்ட புகார் ஏதேனும் வந்துள்ளதா என்பது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். இதேபோல் நீட் முறைகேடு தொடர்பாக நேரடியாக புகார் வந்துள்ளதா என்பது குறித்து சிபிஐ அமைப்பும் பதிலளிக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை எதிர்வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X