2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பா.ஜனதாவுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை,

நாக்பூரில் அண்மையில் கல்லூரி பேராசிரியை ஒருவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக,  ஷிவ்சேனா தலைமையிலான கூட்டணி அரசால் மராட்டியத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டதாக பாரதீய ஜனதா குற்றம் சாட்டி வருகிறது. 

இதற்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெண்களுக்கு எதிரான ஒவ்வொரு குற்றமும் கண்டிக்க த்தக்கது. அதுபோன்ற ஒரு சம்பவம் கூட மீண்டும் நிகழக்கூடாது.

எங்களைக் குறி வைத்து தாக்குவதற்கு முன் ​​பாரதீய ஜனதா, அது ஆட்சி செய்யும் மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

குறிப்பாக,  தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் தாக்கப்பட்டனர்.

" அந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை பயங்கரவாதிகள் என்று அழைக்கப் போகிறேன். " எத்தனையோ நாள்கள் கடந்த போதிலும், இதுவரை இந்தத் தாக்குதல் தொடர்பாக ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

நியாயப்படுத்தப்படாத காரணங்களால் எங்களை குறிவைப்பவர்கள் முதலில் அவர்களது கண்காணிப்பின் கீழ் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X