2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பட்ஜெட் விவகாரத்தில் எந்தக்கால தாமதமும் செய்யவில்லை; ஆளுநர் மாளிகை பதிலடி

Editorial   / 2020 ஜூலை 07 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுச்சேரி,

பட்ஜெட் விவகாரத்தில் எந்த காலதாமதமும் செய்யவில்லை என்று நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் மாளிகை பதிலடி கொடுத்துள்ளது.

புதுச்சேரி முதலமைச்சர்  நாராயணசாமி நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த ஏப்ரல் மாதம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய பெப்ரவரி மாதத்தில்

ஆயத்த நடவடிக்கை எடுத்து கோப்புகளைத் தயாரித்தோம். அதை ஆளுநருக்கு அனுப்பிய போது அதில் பல கேள்விகளை கேட்டு கால தாமதப்படுத்தி திருப்பி அனுப்பினார்.

இதுதான் பட்ஜெட் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டி இருந்தார்.

இதற்கு பதில் அளித்து ஆளுநர் மாளிகை விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உள்துறை அமைச்சகத்துக்கு யூனியன் பிரதேச நிர்வாகத்து க்கான பரிந்துரைகளைப் பரிந்துரைப்பதில் ஆளுநர் அலுவல கத்தால் எந்த காலதாமதமும் ஏற்படவில்லை.

வரவு, செலவு மதிப்பீட்டை உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைப் பதற்கான கோப்பு கடந்த மே மாதம் 7ஆம் திகதி தான் ஆளுநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நிதி துறையில் இருந்து தேவையான விளக்கங்களை பெற்ற பிறகு ஆளுநர் கிரண்பெடி மே மாதம் 13ஆம் திகதி ஆண்டு வரவு, செலவு திட்டத்தை பரிந்துரைத்தார்.

அதன்பிறகு உள்துறை அமைச்சகம் சில தெளிவுபடுத்தல்களை கோரியது.

இதற்கான கோப்பு ஜூன் 10ஆம் திகதி ஆளுநர் அலுவலகத்துக்கு அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டது. அதே நாளில் ஆளுநர் ஒப்புதல் அளித்து உள்துறை அமைச்சகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டது.

இந்த ஒப்புதல்கள் குறித்த விளக்கம் ஆளுநர் அலுவலகத்தால் வார இறுதியில் வெளியிடப்பட்ட கோப்புகளின் பட்டியலில் உள்ளது.

யூனியன் பிரதேச அரசு சட்டம் 1963-ன் கீழ் வருடாந்திர வரவு, செலவு திட்டம் ஆளுநர் பரிந்துரையுடன் முன் ஒப்புதலுக்காக ஜனாதிபதி, உள்துறை அமைச்சகத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பிறகு சட்டமன்றத்தில் இந்த வரவு -செலவு திட்டம் நிறைவேற்றப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .