2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பணிநீக்கம் செய்த பச்சமிளகாய் கூடை

Editorial   / 2021 மே 06 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிகாரத்தில் இருப்பவர்களும் மக்கள் நலன்சார் துறைகளில் பணியில் இருப்பவர்களுக்கும் ஆகக் கூடுதலாக தேவைப்படுவது பொறுமையாகும்.

இந்த கொரோனா காலத்தில், சொல்பேச்சை கேட்காதவர்களே பலரும் இருக்கின்றனர். கண்ணுக்கு கொரோனா தெரியாவிடினும், தொற்றாளர்களின் எண்ணிக்கை மிகவேகமாக அதிகரித்துச் செல்கிறது.

வீட்டில் இருக்கவேண்டும் என்றால், வீதியில் இறங்கிவிடுவர், முகக்கவசத்தை தாடையில் அணிந்துசெல்வர்.

ஆனால், அன்றாடம் ஜீவியம் நடத்துவதற்காக, பலரும் வீதியோரங்களில் சின்ன, சின்ன வியாபாரங்களை செய்வர்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், கொரோனா தொற்றின் வேகம் சடுதியாக அதிகரித்தமையால், கட்டுப்படுத்துவதற்காக, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆகக் குறைவாக பகுதிநேர ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

 

பஞ்சாப்பிலுள்ள சராய் வீதியில், மரக்கறிகளை விற்றுக்கொண்டிருந்ததை பார்த்து, கோபமடைந்த பொலிஸ் அதிகாரியொருவர், அக்காய்கறி கூடைகளை எட்டி உதைத்துவிட்டார்.

பச்சமிளகாய் குவிக்கப்பட்டிருந்த கூடையை எத்தி உதைத்த, படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அதனையடுத்து, அந்த அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

“காவல் துறை உங்கள் நண்பன்” என்பர், ஆனால், காவல்துறை அதிகாரிகள் பலர், சட்டத்தை சடுதியாக கையிலெடுத்து விடுகின்றனர். அதற்கு, பொதுமக்களும் காரண கர்த்தாவாகிவிடுகின்றனர்.

அதிகாரிகளின் பொறுமையை வேண்டுமென்றே சோதிக்கக்கூடாது. அதே​போல், அமுல்படுத்தப்படும் சட்டங்களை மதித்தும் நடக்கவேண்டும். இல்லையேல், எல்லோரையும் கொரோனா சுற்றிவளைத்துவிடும்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X