2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புதுச்சேரியில் துறைமுகம்; கடற்கரை நகரங்களுக்குள் பயணிகள் போக்குவரத்து

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுச்சேரி

புதுச்சேரியில் புதிய சிறிய துறைமுகம் அமைவதால், கடற்கரை நகரங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து சாத்தியத்தைத் திறந்துவைக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுச்சேரியில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரிக்கு இன்று  வந்தார். டில்லியிலிருந்து தனி விமானத்தில் காலையில் கிளம்பி சென்னை வந்த அவர், அங்கிருந்து தனி விமானத்தில் புதுச்சேரிக்கு வந்தார். தொடர்ந்து, புதுச்சேரி ஜிப்மரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றார்.

விழாவில் காணொளி வாயிலாக, புதுச்சேரி பிரதேசத்தை முன்னேற்றும் விதமாக, புதுவையின் காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய ரூ.2,426 கோடி மதிப்பிலான சட்டநாதபுரம்-நாகப்பட்டினம் இடையிலான என்.ஹெச்-45 ஏ தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கும், காரைக்கால் மருத்துவக் கல்லூரியில் ரூ.491 கோடி மதிப்பிலான புதிய வளாகம் கட்டவும், சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியில் புதுச்சேரியில் சிறிய துறைமுகம் அமைக்கவும், புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டுத் திடலில் பழைய ஓட்டப்பந்தய ஓடுதளத்தை மாற்றி ரூ.7 கோடியில் 400 மீட்டரில் செயற்கை ஓடுதளம் அமைக்கவும் அடிக்கல் நாட்டினார்.தொடர்ந்து, ஜிப்மரில் ரூ.28 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆய்வுக்கூடம் மற்றும் பயிற்சி மையத்துடன் கூடிய ரத்த மையம், மகளிர் விளையாட்டு வீரர்களுக்காக இந்திய விளையாட்டு ஆணையத்தால் லாஸ்பேட்டையில் ரூ.11.85 கோடியில் கட்டப்பட்டுள்ள 100 படுக்கைகளுடன் கூடிய மகளிர் விடுதி, புதுச்சேரி கடற்கரை சாலையில் ரூ.14.83 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மேரி கட்டிடம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .