2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘பிராம்ப்டர்’ கருவி வைத்து மு.க.ஸ்டாலின் பிரசாரம்

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 25 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மோடி ஹிந்தியில் தனக்கே உரித்தான பாணியில் சரளமாகப் பிரசாரம் செய்யக் கூடியவர். ஹிந்தி அளவு ஆங்கிலத்திலும் தடையின்றி பேசுவதற்காக மோடி பிரதமரானது முதல் ‘பிராம்ப்டர்’ கருவியைப் பயன்படுத்தி வருகிறார். ஆரம்பத்தில் அவர் ‘பிராம்ப்டர்’ கருவியைப் பயன்படுத்துவது யாருக்கும் தெரியாமல் இருந்தபோது, மோடியின் பிரமாதமான ஆங்கில உரையைக் கேட்டு, அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

அதன்பிறகுதான், மோடி பிராம்ப்டர் கருவியை பயன்படுத்துவது தெரியவந்தது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி  ஒபாமா, அவரது பிரசாரத்துக்கு ‘பிராம்ப்டர்’ கருவியைப் பயன்படுத்தினார். அவரைப் பார்த்து பிரதமர் மோடியும் பயன்படுத்தியதாகக் கூறுகின்றனர்.

தற்போது மோடியைப் போல், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் தனது ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரசார மேடைகளில் ‘பிராம்ப்டர்’ கருவி மூலம் பேசி வருகிறார். சமீப காலமாக ஸ்டாலின் பொது நிகழ்ச்சிகள் மட்டுமில்லாது, கட்சி நிகழ்ச்சிகளில் பேசும்போதும் சில தகவல்களை தவறுதலாகப் பேசி, அது சமூக வலைத்தளங்களில் பரவி விவாதப் பொருளானது.

அதனால், அதுபோன்ற தவறுகளும், தர்மசங்கடமான நிகழ்வும் தேர்தல் பிரசாரத்தில் நடக்காமல் இருக்கவும், ஒவ்வொரு மாவட்டப் பிரச்சினைகளையும் பொதுமக்களுக்கு எளிமையாகப் புரியும்படி துல்லியமாக, அழகாகப் பேசவும், அவரது பிரசார சுற்றுப் பயணத்தை வடிவமைக்கும் ‘ஐ-பேக்’நிறுவனம் கொடுத்த ஐடியா அடிப்படையில் ஸ்டாலின் ‘பிராம்ப்டர்’ மூலம் தற்போது பிரச்சாரம் செய்துவருவதாக கட்சியினர் கூறுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .