2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணம் கொடுப்பது அரசின் கடமை

A.K.M. Ramzy   / 2021 ஏப்ரல் 21 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 டெல்லி:

கொரோனா சூழலால் இடம்பெயரும் புலம்பெயர் தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் பணம் போடுவது மத்திய அரசின் கடமை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

தலைநகர் டெல்லியில், அதிகரிக்கும் கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்தும்விதமாக நேற்று முன்தினம் இரவு முதல் 6 நாள் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தீவிர கட்டுப்பாடுகளும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் டெல்லியில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர். அவர்களில் பலர், சொந்த ஊர் செல்வதற்காக அங்குள்ள ஆனந்த்விகார் பஸ் நிலையத்தில் குவிந்துள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் இடம்பெயரத் தொடங்கியிருக்கின்றனர். இதுபோன்ற சூழலில், அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் போடுவது மத்திய அரசின் கடமை. ஆனால் கொரோனா பரவலுக்கு பிறரை குற்றம்சாட்டும் அரசு, இதுபோன்ற பொது உதவி நடவடிக்கையை எடுக்குமா?’ என்று கேட்டுள்ளார்.

மற்றொரு டுவிட்டர் பதிவில், ‘18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி இல்லை. இடைத்தரகர்களோ எவ்வித விலைக் கட்டுப்பாடும் இல்லாமல் தடுப்பூசிகளை வாங்கி வருகின்றனர். சமூகத்தின் பலவீனமான பிரிவினருக்கு தடுப்பூசி போடுவதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. இது மத்திய அரசின் தடுப்பூசி வினியோகத் திட்டம் இல்லை, தடுப்பூசி பாகுபாட்டுத் திட்டம்’ என்று ராகுல் காந்தி சாடியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .