2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மூன்றாண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெயலலிதாவின் மூன்றாண்டு நினைவு தினம்  இன்று அனுஷ்டிக்கப்பட்டது.இவர், கர்நாடாகாவின் மைசூரில் 1948பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி  பிறந்தார்.  

  1972ல் சிவாஜியுடன் இவர் நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' திரைப்படம் தேசிய விருதை வென்றது. எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி அந்தக் காலத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலின்படி, 1982ஆண்டு அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினரானார்.

1983ல் கொள்கை பரப்புச் செயலரானார். 1984ல் ராஜ்யசபா எம்.பி., ஆனார். 1984 டிசம்பரில் அமெரிக்காவில் எம்.ஜி.ஆர்., சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது நடந்த லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் அ.தி.மு.க., - கூட்டணி வெற்றி பெற்றது.

இதில் ஜெயலலிதாவின் பங்கு முக்கியமானது. எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின் 1987ஆண்டு ஜெ.,- ஜானகி அணிகள் என அ.தி.மு.க., இரண்டாக பிரிந்தது. 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டது.

1989 சட்டசபை தேர்தலில் ஜெ., தலைமையிலான அ.தி.மு.க., 'சேவல்' சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களில் வென்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது.

போடி தொகுதியில் வென்ற ஜெ., தமிழக த்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார். 1989ஆண்டு  அ.தி.மு.க.,வை ஜெ., ஒன்றிணைத்தார்.

அ.தி.மு.க, கூட்டணி 1991 சட்டசபை தேர்தலில் 225 தொகுதிகளில் வென்றது. ஜெயலலிதா முதன்முறை முதல்வரானார். பின் 2001, 2011ல் முதல்வரானார்.

2016 ஆண்டையத் தேர்தலில் 136 தொகுதிகளில் வென்று எம்.ஜி.ஆருக்குப்பின், தொடர்ந்து 2வது முறையாக முதல்வராகி சாதித்தார்.

2016  செப்டெம்பர் 22திகதி உடல்நலம் பாதிக்கப்பட, அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிசெம்பர் 5அம் திகதி  மரணமடை ந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .