2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மும்பை அலுவலகத்தில் பாரிய தீ 3,500 ஊழியர்கள் வெளியேற்றம்

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை, 

மும்பை பைகுல்லா, மஜ்காவ் பகுதியிலுள்ள மஹாரானா பிரதாப் சவுக்கில் 10 மாடிகளை கொண்ட ஜி.எஸ்.டி. அலுவலகம் உள்ளது.

‘ஜி.எஸ்.டி. பவன்’ என அழைக்கப்படும் இந்த கட்டடத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

நேற்றுமுன்தினம் மதியம் 12.30 மணியளவில் ஊழியர்கள் பணியில் இருந்தபோது 9-வது மாடியில் திடீரென தீப்பிடித்தது.

  ஊழியர்களுக்கு அலுவலகத்திலுள்ள ஒலிபெருக்கியில் அறிவிப்பு கொடுக்கப்பட்டதையடுத்து   ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியேறியுள்ளனர்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள்   விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் உள்ளே சிக்கி இருந்தவர்களை வெளியேற்றும் பணியிலும்  ஈடுபட்டனர். 

9-வது மாடியில் முழுவதுமாக பற்றி எரிந்த தீ, 10-வது மாடிக்கும் பரவி கரும்புகை வெளியேறியது.

பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதால் சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்புபடையினரும் விரைந்து வந்தனர். 108 அம்யூலன்ஸ்களும் அங்கு

வரவழைக்கப்பட்டன. 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடித் தீ அணைக்கப்பட்டது. பின்னர் கட்டடத்தை குளிர்விக்கும் பணி தொடர்ந்து நடந்தது.

இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .