2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மாமல்லபுரத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்

Administrator   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் நரேந்திர மோடி - சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இருவரும் நேற்று முன்தினம் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் மாமல்லபுரம் கலைசசிற்பங்கள் அனைத்தும் அழகுப்படுத்தப்பட்டு புதுப்பொலிவுகள் பெற்றன. 

பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரம் சுற்றுலாத் தலங்களை பார்க்க சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 

பின்னர் பிரதமர் மோடி - சீன ஜனாதிபதி சந்திப்பு முடிந்து, நேற்று கோவளம் தனியார் விடுதியில் இருவரும் சந்தித்து 2ஆவது நாளாக பேச்சுவார்த்தை நடத்தினர். மதியம் பேச்சுவார்த்தை முடிந்து இருவரும் சென்னை விமான நிலையம் திரும்பினர்.

இதைத் தொடர்ந்து மாலை 3 மணி அளவில் மாமல்லபுரம் இயல்பு நிலைக்கு திரும்பியது. மாலை 3 மணி முதல் சுற்றுலா பயணிகள் அங்கு குவியத் தொடங்கினர். 

உள்ளூர் மக்கள் நேற்று மாலையில் திரண்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று (13) காலை முதலே மாமல்லபுரத்தில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதிய வண்ணம் இருந்தன. 

இன்று காலை முதல் கடற்கரை கோவில், ஐந்து ரதத்தை பார்ப்பதற்காக நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. அங்கும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .