2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ரிக்‌ஷா தொழிலாளியை நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி !

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாரணாசி,

பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் ரிக்‌ஷா ஓட்டும் தொழில் செய்பவர் மங்கல் கெவத்.  இவர் தனது மகளின் திருமணத்துக்கான அழைப்பிதழை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தார்.  

அதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடியிடமிருந்து வாழ்த்துக்கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் திருமண பெண்ணுக்கும் அவரது குடும்பத்துக்கும்  தனது வாழ்த்துகளையும் ஆசிர்வாதத் தையும்  பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.

பிரதமர் மோடியின் அழைப்பு கடிதம் கிடைத்தது குறித்து மங்கல் கெவத் கூறுகையில், எனக்கு மிகப் பெரிய ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. எங்கள் கிராமத்தில் உள்ளவர்கள் மோடிக்கும் அழைப்பு விடுக்க கூறினார்கள். இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கும் வாரணாசியில் உள்ள அவரது அலுவலகத்துக்கும் திருமண அழைப்பிதழ் அனுப்பினேன்.

ஆனால் அவரிடமிருந்து பதில் வரும் என்று நான் நினைக்கவில்லை. அந்த கடிதம் எனக்கு கிடைத்த உடன் சந்தோஷத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டேன். எனது உறவினர்களிடம் பிரதமர் மோடியின் கடிதத்தை காண்பித்து மகிழ்ச்சியுற்று வருகிறேன்“ என்றார்.

இந்த நிலையில்,  வாரணாசி பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மகளின் திருமணத்துக்கு அழைப்புக் கடிதம் அனுப்பிய ரிக்‌ஷா தொழிலாளியை நேரில் சந்தித்தார். அப்போது, மங்கல் கெவத்தின்  ஆரோக்கியம், குடும்பத்தினர் குறித்து நலம் விசாரித்தார்.

தூய்மை இந்தியா இயக்கத்துக்காக ரிக்‌ஷா ஓட்டுநர் மங்கள் கேவத்தின் பங்களிப்புக்காக பிரதமர் மோடி அவரைப் பாராட்டினார்.

மோடியின் தூய்மை இந்தியா இயக்கத்தினால் ஈர்க்கப்பட்ட  மங்கள் கேவத் தன் கிராமத்தில் கங்கை ஆற்றுக் கரையைத் தானே சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .