2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விக்கிபீடியா இணையதளத்துக்கு எச்சரிக்கை

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதுடில்லி:

காஷ்மீர் குறித்து தவறான வரைபடத்தை வெளியிட்ட விக்கிபீடியா இணையதளத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சில நாள்களுக்கு முன்னர், டுவிட்டர் பயனாளர் ஒருவர், இந்தியா -பூடான் உறவு குறித்த விக்கிபீடியா பக்கம் காஷ்மீரின் வரைபடத்தை தவறாக சித்தரித்திருப்பதை எடுத்துக்கூறி, நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து, இந்த விவகாரத்தை விசாரித்த தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விக்கிபீடியாவுக்கு அனுப்பியுள்ள எச்சரிக்கை கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: காஷ்மீரை தவறாக சித்தரிக்கும் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விக்கிபீடியா இணையதளம் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் மீறியுள்ளது.

பிரச்சினைக்குரிய குறிப்பிட்ட பக்கத்தில் காஷ்மீரின் தவறான படத்தை அகற்ற வேண்டும். உடனடியாக மாற்றங்களை செய்யாவிட்டால், விக்கிபீடியா இணையதளத்தை முடக்குவது உள்ளிட்ட பல நடவடிக்கையை, இந்திய அரசு எடுக்க முடியும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .