2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விடுதலைச் சிறுத்தைகள் ஏற்பாட்டில் 10ஆம் திகதி ஆர்ப்பாட்டம்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 05 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி எதிர்வரும் 10ஆம் திகதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, அக்கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினரு மான தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, திருமாவளவன் இன்று(05) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது;

 விவசாயத் தொழிலைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் வகையில் மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி டிசம்பர் 10 ஆம் திகதி, காலை 10.00 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்திய மக்களுக்குச் சோறிடும் விவசாயிகளை யாசகர்கள் ஆக்கும் விதமாகவும்; இந்திய விவசாயத் துறையை கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக மாற்றும் விதமாகவும் பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரலாறு காணாத அளவில் விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திக் கொண்டி ருக்கிறார்கள்.

அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அவர்களுக்கு எதிரான அவதூறுப் பிரசாரத்தில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. இந்த சட்டங்கள் இயற்றப்பட்டதற்குப் பிறகு அத்தியா வசியப் பொருட்களின் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

கொரோனா நெருக்கடியால் ஏற்கெனவே விழிபிதுங்கிக் கொண்டிருக்கும் ஏழை எளிய மக்கள் இந்த விலை உயர்வால் சாவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டிருக்கி றார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .