2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வதந்தியை நம்பாதீர்; முட்டை, கோழி இறைச்சியை உண்ணலாம்

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

முட்டை, கோழி இறைச்சி ஆகியவற்றால் கொவிட்-19 வைரஸ் பரவுவதாக பரப்பப்படும் செய்திகள் வதந்திகளாகுமென தெரிவித்த தமிழ்நாடு கால்நடை

பராமரிப்புத்துறை,பொதுமக்கள் அவற்றைத் தயக்கமில்லாமல் உண்ணலாம் என்று விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக, கால்நடை பராமரிப்புத்துறை இன்று (ஏப்.1) வெளியிட்ட

செய்திக்குறிப்பில், "நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொவிட்-19  வைரஸ் தொற்று நோய் பரவுதலைத் தடுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து

வருகிறது. இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருட்களின் உற்பத்தி மற்றும் நகர்வுகள் தடையின்றி

நடைபெறவும் கால்நடை, கோழி, முட்டை, மீன், இறைச்சி மற்றும் கால்நடை தீவனம், கால்நடை தீவனத்துக்கான உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் நகர்வுகளுக்கும்

விலக்கு அளிக்க தமிழ்நாடு முதல்வரால் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் காணொளி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரின் உத்தரவின் பேரில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம்

மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலர் அரசாணை எண்.152 குடும்ப நலம் மற்றும் சுகதாரத்துறை (P1) நாள் 23.3.2020-ன்வழி கால்நடை, கோழி, மீன், முட்டை,

இறைச்சி மற்றும் கோழித் தீவனம், கால்நடை தீவன உற்பத்திக்கான மூலப்பொருட்கள் ஆகியவற்றின் நகர்வுகளை அனுமதிக்க அனைத்து மாவட்ட

ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களையும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், தற்போது கோழி இறைச்சி, முட்டை, இதர கோழி உணவு பொருட்கள் சாப்பிடுவதால் கோவிட்-19 தொற்று நோய் பரவக்கூடும் என ஒரு தவறான

செய்தியினை பொதுமக்களிடம் ஒரு பிரிவினரால் சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பப்பட்டு வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .