2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வழிபாட்டு தலங்கள் திறப்பு; 8 ஆம் திகதி முதல் அலுவலகங்கள் செயல்படும்

A.K.M. Ramzy   / 2020 மே 30 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொல்கத்தா

மேற்கு வங்கத்தில் கோயில்கள், மசூதி, குருத்வாரா உட்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும், ஜூன் 8 முதல் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்

கொவிட்-19 தொற்றைக்  கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டு ள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்றைக்  கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மே 3ஆம் திகதி வரையும் பின்னர் மே 17ஆம் திகதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4ம் கட்டமாக மே 31 ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் கொவிட்-19  தொற்று குறைவாக இருப்பதால், 4ஆம் கட்ட ஊரடங்கில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதன்படி மாவட்ட மற்றும் புறநகர் ரயில்களை இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

அனைத்து வர்த்தக நிறுவனங்களும் செயல்படத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து மே 31ஆம் திகதிக்குப் பிறகு வழிபாட்டு தலங்கள் அனைத்தும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ஜூன் 1ஆம் திகதியில்  இருந்து மேற்கு வங்கத்தில் கோயில்கள், மசூதி, குருத்வாரா உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர்

மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். ஆனால் 10 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் ‘‘மதம் தொடர்பான இடங்களில் கூட்டத்துக்கு அனுமதி இல்லை.

ஜூன் 8 முதல் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கும். உம்பன் புயல் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .