2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

வழமைக்குத் திரும்பும் விமான போக்குவரத்து துறை

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 21 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னன்

கொரோனா பரவலால், கடந்த எட்டு மாதங்களாக சுதந்திரமாக பறக்க முடியாமல் தவித்து வந்த விமானத் துறை, தற்போது தொற்றுநோய் பரவல் குறைந்து வருவதை அடுத்து, இயல்பு நிலைக்கு திரும்பி வரத் துவங்கியுள்ளது.

நம் நாட்டில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச், 25ஆம் திகதி  முதல், விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. இதையடுத்து, உள்நாட்டு விமான சேவை மட்டும் துவங்கப்பட்டது. வளர்ச்சி வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வர, 'வந்தே பாரத்' திட்டத்தின்கீழும், ஒப்பந்தம் அடிப்படையிலும், சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பல மாதங்களுக்குப் பின், விமானத் துறை, தற்போது, இயல்பு நிலைக்கு திரும்பி வரத் துவங்கி உள்ளது.கடந்த, 13ஆம் திகதி  நிலவரப்படி, உள்நாட்டில், 2,308 விமான சேவைகள் மூலம், மூன்று இலட்சத்து, 10 ஆயிரத்து, 387 பேர் பல ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .