2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க அரசுக்கு விருப்பமில்லை

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 23 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வயநாடு

விவசாயிகள் பிரச்சினை குறித்து பொப் பாடகர்கள் பலர் கருத்துத் தெரிவித்தபோதிலும் விவசாயிகள் பிரச்சினை யைத் தீர்க்க மத்திய அரசுக்கு விருப்பமில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசு மீது குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது தொகுதியான வயநாட்டுக்கு இருநாள்கள் பயணமாகச் சென்றுள்ளார். திரிகைபட்டா முதல் முட்டில் வரையிலான 6 கிலோமீட்டர் தொலைவுக்கு டிராக்டர் பேரணியில் ராகுல் காந்தி பங்கு கொண்டார். அதன்பின் பூத்தாடி பஞ்சாயத்தில் குடும்பஸ்ரீ சார்பில் நடந்த திட்டங்களை ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.

அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

காங்கிரஸ் அரசு கொண்டுவந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பிரதமர் மோடி கடந்த 2014ஆம் ஆண்டு பதவி ஏற்றபோது கிண்டல் செய்தார்.

ஆனால், நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் இருந்த நேரத்தில் பிரதமர் மோடி, வேறுவழியின்றி, 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலைநாட்களை அதிகரித்து, மக்களுக்குப் பணத்தை வழங்கினார். கொரோனா காலத்தில் மக்களைக் காக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்பட்டது எனும் உண்மையை பிரதமர் மோடி வலுக்கட்டாயமாக ஒப்புக்கொண்டார். கிராமப்புறங்களில் வாழும் ஏழை மக்களுக்கு சமூகப் பாதுகாப்பையும், வேலைவாய்ப்பையும் கொரோனா காலத்தில் அளித்தது இந்தத் திட்டம்தான்.

சுயஉதவிக்குழு, 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவை காங்கிரஸ் காலத்தில் கொண்டுவரப்பட்டவை, இது பரிசு அல்ல. நமது மக்களுக்கு அதிகாரம் அளித்து வலிமையடைச் செய்யும் கருவி.

உலகின் பல்வேறு பொப் பாடகர்கள் இந்திய விவசாயிகள் நிலை குறித்துக் கவலைப்பட்டு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தார்கள். ஆனால், விவசாயிகள் பிரச்சினைகளைத் தீர்க்க மத்திய அரசுக்கு விருப்பமில்லை. நாம் மத்திய அரசைக் கட்டாயப்படுத்தாவிட்டால், இந்த 3 வேளாண் சட்டங்களையும் அவர்கள் திரும்பப் பெறப் போவதில்லை என ராகுல் காந்தி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X