2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விவசாயிகள் போராட்டம்: 19ஆம் திகதி மீண்டும் பேச்சு

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 16 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேளாண் சட்டங்கள் தொடர்பாக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு வெள்ளிக்கிழமை நடத்திய 9ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது; இரு தரப்பினரிடையேயான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 45 நாள்களுக்கு மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு கடுங்குளிர் நிலவி வரும் சூழலிலும் போராட்டத்தைக் கைவிட விவசாயிகள் மறுத்து வருகின்றனர்.

 வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அச்சட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக நான்கு நபர்கள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.

அதையடுத்து எந்தவிதத் தீர்வும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இந்த விவகாரத்தில்தீர்வு காண்பதற்காக எதிர்வரும் 19 ஆம் திகதி விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X