2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மாலத்தீவில்

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 21 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவு மற்றும் மொரீஷியசுக்கு, அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு உள்ளார். பயணத்தின் முதல் கட்டமாக, மாலத்தீவுக்கு, நேற்று சென்றார். விமான நிலையத்தில் அவரை, மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் வரவேற்றார். பின், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்சங்கர் கூறுகையில், “மாலத்தீவில், விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 290 கோடி ரூபாய், கடனாக வழங்க முடிவு செய்துள்ளோம்,” என்றார்.  இரண்டு நாள்கள் இங்கு தங்க இருக்கும் ஜெய்சங்கர், இந்திய அரசு உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சில திட்டங்களை, துவக்கி வைக்க இருக்கிறார்.

இந்தப் பயணத்தில், மாலத்தீவு ஜனாதிபதி  இப்ராகிம் முகமது சோலியை, ஜெய்சங்கர் சந்தித்துப் பேச உள்ளார். மேலும், மாலத்தீவு சபாநாயகர் முகமது நஷீத், வெளியுறவுத் துறை அமைச்சர், இராணுவ அமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த சந்திப்புகளில், இரு நாடுகளுக்கும் இடையே, சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இரண்டு நாள் பயணத்தை முடித்துவிட்டு, ஜெய்சங்கர், நாளை மொரீஷியசுக்கு செல்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .