2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வேளாண் துறை சீர்திருத்தங்களுக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 22 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி,

வேளாண் துறை சீர்திருத்தங்களுக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதற்கான தீர்மானம் பாரதிய ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

 பாரதிய ஜனதாவின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா பதவியேற்ற பின்னர் கடந்த ஆண்டு கட்சியின் தேசிய நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டனர். இந்த புதிய நிர்வாகிகளின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது.  இதில் கட்சியின் மாநில தலைவர்களும் பங்கேற்றனர்.

கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர், புதிய வேளாண் சட்டங்களால் ஏற்படும் பயன்கள் குறித்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.

பின்னர் நடந்த இந்த கூட்டத்தில், விவசாய சீர்திருத்தங்க ளுக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்ப ட்டது. குறிப்பாக வேளாண் சட்டங்கள் மற்றும் கொரோனாவை வலிமையாக கையாண்ட தற்காக பிரதமரை பாராட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் கொரோனா காலத்தில் அமுல்படுத்தப்பட்ட கரிப் கல்யான் யோஜனா திட்டம், விரிவான மத்திய பட்ஜெட் மற்றும் சீனாவுடனான எல்லை பிரச்சினையை மத்திய அரசு திறம்பட கையாண்டது குறித்தும் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X