2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஷிவ் சேனா ஆட்சியமைக்க சோனியா மறுப்பு?

Editorial   / 2019 நவம்பர் 05 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மகாராஷ்ராவில் ஷிவ் சேனா ஆட்சியமைக்க ஆதரவு வழங்க, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி மறுப்பு தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மகாராஷ்ரா சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்களில் வெற்றிபெற்ற பாரதிய ஜனதாக் கட்சி (பா.ஜ.க), ஷிவ் சேனா கூட்டணியில் முதலமைச்சர் பதவியை பகர்ந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள மோதலால் புதிய ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்ராவில் ஆட்சியமைக்க ஷிவ் சேனாவுக்கு   தேசியவாத காங்கிரஸ் ஆதரவளிக்கும் எனக் கூறப்பட்டது. தேசியவாத காங்கிரஸின் தலைவரான சரத் பவார், இந்தியத் தலைநகர் டெல்லியில், நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினருமான சோனியா காந்தியை நேற்று சந்தித்தார். அப்போது மகாராஷ்ராவில் ஷிவ் சேனாவை ஆதரிக்க சோனியா காந்தி திட்டவட்டமாக மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

சோனியாவுடனா சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினருமான சரத் பவார், “ஷிவ் சேனா-பா.ஜ.க மோதல் என்பது அவர்களது கூட்டணியின் உள்விவகாரம், ஷிவ் சேனா எங்களுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. ஆட்சி அமைக்க எங்களிடம் தேவையான சட்டசபை உறுப்பினர்கள் இல்லை. எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தயாராக இருக்கிறோம்” எனக் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .