2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (15.02.2015)

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (15.02.2015)

மேடம்
எந்த ஒரு விடயத்திலும் நாட்டம் இருக்காது. உடல் நலனில் சிறிது அக்கறை காட்டுவது நல்லது. விளையாட்டுக்களில் ஈடுபடும் பொழுது அதிக அளவில் கவனம் தேவை. 
அஸ்வினி : துன்பம்
பரணி : செலவு
கிருத்திகை 1ஆம் பாதம் : துக்கம்


இடபம்
பணியிடத்தில் பணியாளர்களுடன் சுமூகமான உறவை வளர்த்துக்கொள்வது அவசியம். தொழில் சம்மந்தமாக  பிரயாணங்கள்  உண்டாகும். வீணான அலைச்சல் மற்றும் உடலில் அசதி ஆகியவை காணப்படும். 
கிருத்திகை 2, 3, 4: கஷ்டம்
ரோகிணி : பகை
மிருகசீரிடம் 1, 2: அலைச்சல்


மிதுனம் 
இல்லத்தில் திருடர்களினால் பயம் உண்டாகும்.  தொழில் விஷயத்தில் முன்னெச்சரிக்கையுடன் நடப்பது நல்லது.  நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள்.  
மிருகசீரிடம் 2, 3 : பயம்  
திருவாதிரை : சிரமம்
புனர்பூசம் : லாபம்


கடகம்
எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். புதிய தொழில்களுக்கான பேச்சுக்கள் நடைபெறும். உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சி காணப்படும். 
புனர்பூசம் : பேட்டி
பூசம் : சாதனை
ஆயில்யம்: வெற்றி


சிம்மம்
தீயவர்களின் நட்புக்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத விதமாக சில இழப்புக்கள் உண்டாகும். மனதை பாதிக்கும் வண்ணம் சில நிகழ்ச்சிகள் உண்டாகும். 
மகம்: நஷ்டம்
பூரம்: சிக்கல்கள்
உத்திரம் 1ஆம் பாதம்: துன்பம்


கன்னி
பணத்திற்கு தட்டுப்பாடுகள் காணப்படும் இருந்த போதிலும் சமாளித்து விடுவீர்கள்.  தொழிலில் ஆர்வம் அதிக அளவில் காணப்படும். வரவிற்கேற்ற செலவுகள் காணப்படும். 
உத்திரம் 2, 3, 4: ஆர்வம்
அஸ்தம்: இன்பம் 
சித்திரை 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி


துலாம்
சில தவிர்க்க முடியாத செலவுகள் காணப்படும். மனம் சஞ்சலம் அடையும். அனாவசிய பேச்சுக்களால் பிரச்சனைகள் உண்டாகலாம். 
சித்திரை 3, 4ஆம் பாதம் : செலவுகள்
சுவாதி : துன்பம் 
விசாகம் 1, 2, 3 : பிரச்சினை


விருட்சிகம்
நல்ல நண்பர்களினால் வெளியில் சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். மேலும் தொழிலிலும்  அக்கறை செலுத்துவது நல்லது. மனதளவில் அலைச்சல்கள் தோன்றும்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: அலைச்சல்
கேட்டை: இன்பம்


தனுசு
பண விடயத்தில் கவனத்துடன் இருப்பது அவசியமாகும். தொழில் விடயத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உடல் நலத்தில் சிறிது குறைபாடுகள் காணப்படும். 
மூலம்: பயம்
பூராடம்: துன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: அலைச்சல்


மகரம்
செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். தொழிலில் லாபம் உண்டாகும் மனம் மகிழ்ச்சியடையும். 
உத்திராடம் 2, 3, 4: அலைச்சல்
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2: உதவி 


கும்பம்
தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும் செயல்களில சிறு சிறு தவறுகள் தோன்றும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே தழுவும். கவனம் அவசியம்.
அவிட்டம் 3, 4: அலைச்சல்
சதயம் : துன்பம் 
பூரட்டாதி 1, 2, 3: துக்கம்


மீனம்
பெண்களினால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். விருந்துகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறுவீர்கள். இடமாற்றத்தினால் நல்லதொரு மனமாற்றம் உண்டாகும். 
பூரட்டாதி 4: இன்பம் 
உத்திரட்டாதி: மகிழ்ச்சி
ரேவதி: உதவி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .