2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இன்றைய பலன்கள் (11.05.2015)

A.P.Mathan   / 2015 மே 11 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (11.05.2015)        

மேடம்
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். இதனால்  மகிழ்ச்சி  உண்டாகும் இல்லம் தேடி இன்பமான செய்திகள் வந்து சேரும்  
அஸ்வினி : மகிழ்ச்சி
பரணி : இன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: நன்மை


இடபம்
உறவினர்களிடையே அன்யோன்யம் கூடும். இதனால் உறவுகள் பலப்படும். மகிழ்ச்சி உண்டாகும்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி: அன்யோன்யம்
மிருகசீரிடம் 1, 2: இன்பம்


மிதுனம் 
சகோதர, சகோதரிகளின் வருகையினால் மகிழ்ச்சி ஏற்படும். நல்ல உறக்கங்கள் கிடைக்கும். அரசினரால் தனலாபங்கள் ஆகியவைகள் உண்டாகும்.
மிருகசீரிடம் 2, 3: ஒற்றுமை
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்:  செலவுகள்


கடகம்
பெண்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும். மேலும் பெண்களினால் இன்பமான சூழ்நிலை உருவாகலாம். முயற்சி செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும்.
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம்: நன்மை
ஆயில்யம்: இன்பம்


சிம்மம்
அதிகாரிகளை பேட்டி காணும் சூழ்நிலை உருவாகும். செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியை தேடி தரும். வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். 
மகம்: பேட்டி
பூரம்: மகிழ்ச்சி 
உத்திரம் 1ஆம் பாதம்: வெற்றி


கன்னி
இசையில் ஆர்வம் அதிகரிக்கும். அதனால் மனதில் மகிழ்ச்சி  ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள் . இருந்தபோதிலும் மனதளவில் கஷ்டங்கள் தோன்றும்.
உத்திரம் 2, 3, 4: கஷ்டம்
அஸ்தம்: முயற்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி  


துலாம்
தொழில் சம்மந்தமாக வெளியூர் செல்லும் சூழ்நிலை உருவாகும். இதனால் உடலில் தலைவலி   மற்றும் காய்ச்சல் ஆகியவை உண்டாகும் இதனால் மனதளவில் பயம் தோன்றி மறையும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : துன்பம்
சுவாதி: பயம்
விசாகம் 1, 2, 3: பிரயாணம்


விருட்சிகம்
புதிய  ஆடைகளை  அணியும் சூழ்நிலை உருவாகும். இதனால் மனதில்  உற்சாகம் பிறக்கும் நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி வகைகள்  கிடைக்கும்
விசாகம் 4: நன்மை 
அனுசம்:  மகிழ்ச்சி 
கேட்டை: இன்பம்


தனுசு
நல்ல நண்பர்களின் உறவுகள் கிடைக்கும். வெளியிடங்களுக்கு சென்று உணவு  உண்ணும் நிலை உருவாகும். உடலளவில்  அலைச்சல்கள் ஏற்படும் .
மூலம்: இன்பம் 
பூராடம்: மகிழ்ச்சி 
உத்திராடம் 1ஆம் பாதம்: அலைச்சல்


மகரம்
தொழிலில் புதிய முயற்சிகள் செய்து வியாபாரத்தை பெருக்கிக்கொள்வீர்கள்.  வியாபாரம் சம்மந்தமாக வெளியூர் செல்வீர்கள்  இதனால் அதிக அளவில் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள்.
உத்திராடம் 2, 3, 4: முயற்சிகள்
திருவோணம்: இன்பம் 
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி


கும்பம்
அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் வீணாக  பிரச்சனை ஏற்படும். எனவே நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும். வயது மூத்தவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.
அவிட்டம் 3, 4: பிரச்சினை
சதயம் : துன்பம்
பூரட்டாதி 1, 2, 3: சந்திப்பு


மீனம்
சில நல்ல மனிதர்களின்  சேர்க்கைகள் கிடைக்கப்பெறுவீர்கள். குடும்பத்தில் உடன்பிறந்தவர்களின் வருகை ஏற்படும் இதனால் இல்லத்தில் மகிழ்ச்சி நல்ல உறக்கம் கிடைக்கும்.
பூரட்டாதி 4:  மகிழ்ச்சி
உத்திரட்டாதி:  தூக்கம் 
ரேவதி: இன்பம்    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X