2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (07.06.2015)

Menaka Mookandi   / 2015 ஜூன் 06 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (07.06.2015)

மேடம்
குழந்தைகளுடன்  சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். மாற்றுத் தொழிலில் லாபம் உண்டாகும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.
அஸ்வினி: மகிழ்ச்சி
பரணி: இன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: செலவு

இடபம்
இரத்த சம்மந்தமான உறவுகள் மூலம் நன்மை கிடைக்கப்பெறுவீர்கள்.  வெளியில் செல்லும் போது கவனத்துடன் இருப்பது அவசியம். விருந்து மற்றும் உபசரிப்புக்களில் கலந்து கொள்வீர்கள்.
கிருத்திகை 2, 3, 4: கவனம்
ரோகிணி: செலவு
மிருகசீரிடம் 1, 2: இன்பம்

மிதுனம்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். கடின உழைப்பின் மூலம் ஆதாயத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். பண வரவு சுமார்தான் என்றாலும் சமாளித்து விடுவீர்கள்.
மிருகசீரிடம் 2, 3: ஆர்வம்
திருவாதிரை: உழைப்பு
புனர்பூசம்: கவனம்

கடகம்
தொந்தரவு கொடுத்து வந்த நோய் நொடிகளில் இருந்து விடுதலை கிடைக்கப் பெறுவீர்கள். பெண்கள் பொறுமையுடன் பேசினால் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை .
புனர்பூசம்: துன்பம்
பூசம்: பிரச்சினை
ஆயில்யம்: அலைச்சல்

சிம்மம்
நண்பர்களிடமிருந்து சரியான நேரத்தில் உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். அரசு வகையில் லாபமும் அனுகூலமும் கிடைக்கப்பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய உக்திகளை செலுத்தி வெற்றி காண்பீர்கள்
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: இலாபம்

கன்னி
உடல்நிலை மேம்பாட்டிற்கான பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். பெற்றோரின் உடல் நிலையில் அக்கறை காட்டுவது அவசியம்.
உத்திரம் 2, 3, 4: வெறுப்பு
அஸ்தம்: துன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: செலவு

துலாம்
அக்கம் பக்கத்தினரிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.  எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சிகளுக்கு மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: இன்பம்
சுவாதி: துன்பம்
விசாகம் 1, 2, 3: வெற்றி

விருட்சிகம்
உஷ்ணம் சம்மந்;தமான பிரச்சனைகளில் அவதிப்படுவீர்கள். ஒரு சில வேலைகளில் இழுபறியான நிலை காணப்படும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
விசாகம் 4: சிக்கனம்
அனுசம்: துக்கம்
கேட்டை: அலைச்சல்

தனுசு
பெண்களுக்கு தலைமைப் பொறுப்பிற்கான வாய்ப்புகள் கூடி வரும். பெண்களுடைய தேவைகள் நிறைவேறும் விதத்தில் பணவரவுகள் இருக்கும். குல தெய்வ வழிபாடுகளில் ஈடுபடும் வாய்ப்புக்கள் உண்டாகும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: தனலாபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: வெற்றி

மகரம்
விழிப்புணர்வுடன் இருப்பதால் சில இழப்புக்களைத் தவிர்கலாம். பிறரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். உணவு மற்றும் ஆரோக்கிய விடயத்தில் கவனம் தேவை
உத்திராடம் 2, 3, 4: துக்கம்
திருவோணம்: இலாபம்
அவிட்டம் 1, 2: கவனம்

கும்பம்
வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக இடமுண்டு. அதிக அலைச்சலால் உடல் நிலையில் சோர்வு உண்டாகும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
அவிட்டம் 3, 4: கஷ்டம்
சதயம்: துன்பம்
பூரட்டாதி 1, 2, 3: தோல்வி

மீனம்
ஒரு சில வேலைகளில் இழுபறியான நிலை காணப்படும். அக்கம் பக்கத்தினரிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.  தொழிலில் சக நண்பர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது.
பூரட்டாதி 4: தவறுகள்
உத்திரட்டாதி: துன்பம்
ரேவதி: தோல்வி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .