2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (03.06.2020) திடீர் திருப்பம் நிறைந்த நாள்!

Editorial   / 2020 ஜூன் 03 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேஷம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை  துளிர்விடும்  நாள்

ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். மதிப்பு கூடும் நாள்.

மிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கடகம்: திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள் .

சிம்மம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.  உடன்பிறந்தவர்கள் உங்கள்  நலனில் அதிக அக்கறை காட்டு வார்கள். சொத்து பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். பெற்றிபெறும் நாள்.

கன்னி: குடும்பத்தில்  சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

துலாம்:  ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உதவி செய்கிறேன் என்று சொல்லிகூட இருந்தவர்கள் உங்களுக்கு உதவாமல் போகக்கூடும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுகொடுத்து போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத் திட வேண்டாம். சொந்த பந்தங்க ளுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். உடல் நலம் பாதிக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

தனுசு: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர் கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். தாய் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

மகரம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழி வார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். பழைய கடனில்ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சிந்தனை திறன் பெருகும் நாள்.

கும்பம்:  கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு எளிதாக தீர்வு காண்பீர்கள். நேர்மறை சிந்தனை அதிகரிக்கும். உடல் நலம்சீராகும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

மீனம்: சந்திராஷ்டமம்   தொடர் வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .