2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (14.05.2020) ஆடை ஆபரணங்கள் சேரும்!

Editorial   / 2020 மே 14 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேஷம்: வேலைக்கான நேர்காணல்களில் வெற்றி கிடைக்கும். கீழே பணிபுரிபவர்களுக்குக் கட்டளையிடும் உயர்பதவி கிடைக்கும். அரசு ஆதரவு இருக்கும். கல்வியில் தேர்ச்சி ஏற்படும்.

ரிஷபம்: தெய்வ சிந்தனை அதிகரிக்கும். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். கோவில், குளம் போன்ற திருப்பணிகளில் ஈடுபடுவதால், புகழ் ஓங்கும். உல்லாசப் பயணங்களால் சந்தோஷம் நிலவும்.

மிதுனம்: அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருக்கவும். அனைவருக்கும் நல்லதே நினைக்கும் எண்ணத்தைக் கைக்கொள்வது நல்லது உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு.

கன்னி: குழந்தைகள் உடல் நிலையில் அக்கறை தேவை. அனைவருடனும் சுமுகமாகப் பழகி, அமைதியாக நடந்தால் எதிர்ப்புகள் குறையும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் ஏளனமே மிஞ்சும்.

மகரம்: அனைத்து விஷயங்களிலும் மனத்திருப்தி ஏற்படும். புத்தி சாதுர்யமும், வாக்கு வன்மையும் ஓங்கும். இனிய பயணங்களால் இன்பம் பெருகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் நிலவும்.

கடகம்: புதியன கற்பதில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய வாகனங்கள் வாங்கத் திட்டமிடுவீர்கள். சுவையான உணவுகளை ருசித்து மகிழ்வீர்கள். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாய் நடக்கும்.

சிம்மம்: அனைத்து நலன்களும் உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும். உதவிக்கரம் நீட்டுவர் நண்பர்கள். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும். புகழும் உண்டாகும்.

துலாம்: வியாபாரத்தில் தனவரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. தேவையற்ற சிந்தனைகளால் படுத்தவுடன் தூக்கம் வராது. தாயின் ஆரோக்கியம் பற்றிய கவலைகள் அதிகரிக்கும்.

மீனம்: காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த அரசு உதவிகள் தாமதம் இன்றி கிடைக்கும். கல்வியில் தேர்ச்சி ஏற்படும். பதவி மற்றும் அந்தஸ்து உயர்வு ஏற்படும்.

தனுசு: தனலாபம், குடும்பத்தில் நிம்மதி, குடும்ப சுகம் ஆகியவை குறையும். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. மாணவர்கள் மிகுந்த அக்கறையுடன் படித்தல் அவசியம்.

விருச்சிகம்: அனைத்துக் காரியங்களிலும் கை கொடுப்பாள் மனைவி. குழந்தைகள் மேல் பாசம் பொழிவீர்கள். அரசு ஆதரவால் தொழில் வளர்ச்சியில் திருப்தி நிலவும். ஆடைஆபரணங்கள் சேரும்.

கும்பம்: இடமாற்றங்களை எதிர்பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .