2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

10 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு ஆப்கானிஸ்தானில் கடந்தாண்டு போடப்பட்ட குண்டுகள்

Editorial   / 2020 ஜனவரி 29 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க விமானப்படையின் தரவுப்படி, குறைந்தது 10 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு ஆப்கானிஸ்தானில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் குண்டுகளைப் போட்டுள்ளன.

கடந்தாண்டு ஆப்கானிஸ்தானில் 7,423 குண்டுகளை இலக்குகளின் மீது ஐக்கிய அமெரிக்கா போட்டுள்ளது என நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் ஐக்கிய அமெரிக்க விமானப் படைகளின் மத்திய கட்டளை தெரிவித்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு 7,362 குண்டுகளையே ஐக்கிய அமெரிக்கா வீசியிருந்தது.

அந்தவகையில், குறித்த எண்ணிக்கைகளானவை குண்டுகள் வீசப்படுவது அதிகரிப்பை காண்பிக்கின்றது. ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் 2009ஆம் ஆண்டு 4,147 குண்டுகளே வீசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையியில், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதிபதியாக 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் குண்டுத் தாக்குதல்களை ஐக்கிய அமெரிக்கா அதிகரித்துள்ளது. ஏனெனில், பொதுமக்கள் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கான இலக்குகள் ஐக்கிய அமெரிக்க அல்லது ஆப்கானிஸ்தான் படைகளுக்கு துல்லியமாக இருக்க வேண்டும் என்ற விடயம் அகற்றப்பட்டிருந்தது.

ஆப்கானிஸ்தானின் வட பால்க் மாகணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டிருந்த விமானத் தாக்குதல்களில் மூன்று சிறுவர்கள் உள்ளடங்கலாக குறைந்தது ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்தோரிடமிருந்து ஆர்ப்பாட்டங்களைத் தோற்றுவித்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X