2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

18 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றிய செக். குடியரசு

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 18 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த 2014ஆம் ஆண்டி வெடிமருந்துக் களஞ்சிய வெடிப்பு ஒன்றில் ரஷ்ய புலனாய்வுச் சேவைகள் பங்கெடுத்ததான சந்தேகத்தில் 18 ரஷ்ய இராஜதந்திரிகளை செக் குடியரசு வெளியேற்றுவதாக அந்நாட்டு அரசாங்கம் நேற்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவிலுள்ள செக் குடியரசுத் தூதரகத்தை மூடுவது குறித்து ரஷ்யா கருத்திற் கொள்வதாக ரஷ்ய செய்தி முகவரகமான இன்டர்ஃபக்ஸ், இராஜதந்திர தகவல் மூலமொன்றை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

விர்பிடிஸ் பகுதியில் வெடிமருந்துக் களஞ்சிய வெடிப்பில், ரஷ்ய புலனாய்வுச் சேவை ஜி.ஆர்.யு அதிகாரிகள் பங்கெடுத்தது குறித்து சந்தேகம் நிலவுவதாக தொலைக்காட்சியில் நேரலையில் செக் குடியரசு பிரதமர் அன்ட்ரெஜ் பபிஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத வெடிப்பில், தனியார் நிறுவனமொன்றின் இரண்டு பணியாளர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .