2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘1994 ருவாண்டா இனவழிப்பை பிரான்ஸ் செயற்படுத்தியது’

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 20 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த 1994ஆம் ஆண்டு 800,000 பேர் கொலை செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டதில் பிரான்ஸின் வகிபாகம் தொடர்பான ருவாண்டா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையில், தடுக்கக்கூடிய இனவழிப்பை செயற்படுத்தியதுக்காக பிரெஞ்சு அரசாங்கமானது குறிப்பிடத்தக்க பொறுப்பைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த 1994ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற படுகொலைகளை நிறுத்த பிரான்ஸ் எதுவும் செய்யவில்லை எனவும், இனவழிப்புக்கு பிந்தைய ஆண்டுகளில் அதன் வகிபாகத்தை மறைக்க முயன்றதெனவும், இதை மேற்கொண்ட சிலருக்கு பாதுகாப்பை வழங்கியிருந்ததெனவும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .